Friday 29 May 2015

சிப்பி மற்றும் பால் காளான் வளர்ப்பு…….

mushroomஎல்லோருக்கும் குறுகிய  காலத்தில் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு? ஆனால் அப்படி குறைந்த முதலீட்டில், அதிக உழைப்பை ஈடுபடுத்தி செய்யக் கூடிய தொழில் உண்டா? ஆம் உண்டு என்று சொல்கிறார். Dr.P. அழகேசன் (திட்ட ஒருங்கிணைப்பாளர் – மைராடா வேளாண் அறிவியில் மையம்,  ஈரோடு மாவட்டம்)  கடந்த ஆகஸ்ட் மாதம் காளான் வளர்ப்புப் பயிற்சியின் போது முன்னுரை கொடுத்தவராக நிறைய தொழில்கள் குறைந்த முதலீட்டிலும் அதிக உழைப்பைக் கொடுத்தும் முன்னேறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உதாரணமாகத் தேனீ வளர்ப்பு, காளான் வளர்ப்பு போன்றவைகளைக் கூறுலாம். இன்றைய கால கட்டங்களில் தேன் உணவுக்கு அதிக வரவேற்பும், சந்தையில் நிறைய தேவையும் உள்ளது. மருத்துவம் முதல் அன்றாடத் தேவை வரை அனைத்திற்கும் பயன்படுத்தப்படுவது தேன்.  அனால் இன்றைய சூழலில் அதிகமாகப் பூச்சிக் கொல்லி மருந்துகள் விவசாயத்தில் பயன்படுத்தப்படுவதால் சுற்றுப்புறச்சூழல் அதிகமாக பாதிப்படைந்துள்ளது. இதுவே தேனீக்கள் குறைந்து (உற்பத்தி ) வருவதற்குக் காரணம் என்று கூறித்  தன் வருத்தத்தைப் பதிவு செய்தார். அனைவரும் இயற்கையை நேசிக்க வேண்டும். இயற்கை விவசாயத்தை எளிய தொழில் நுட்ப முறையில் செய்து மக்களும் மண்ணும் பயனுறச் செய்திட வேண்டும் என்றார். இன்றைய கால கட்டத்தில் உணவுக் கலாச்சாரம் மிகவும் சீரழிந்துள்ளது.  பாஸ்ட் புட் உணவே இதற்குச் சிறந்த உதாரணம். நுகர்வோர் மாற்று உணவுக்குத் தயாராக உள்ளனர்.  ஆனால் அதைப் பூர்த்தி செய்வதற்குச் சந்தையில் போதிய இயற்கை உணவுகள் கிடைப்பதில்லை. அதனாலேயே காளான் உற்பத்தியில் நாம் இன்னும் ஆரம்ப நிலையிலேயே இருப்பதைச் சுட்டிக் காட்டினார்.அனைவரும் அரிசி உணவை உண்பதனாலேயே சர்க்கரை நோய்  வருகிறது.  அதைத் தவிர்த்து ராகி, கம்பு, சோளம் போன்ற சிறுதானியங்களைத் தங்களின் அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியம் காப்பதுடன், கொழுப்பு போன்ற உடல் உபாதைகள் சேர்வதைத் தவிர்க்கலாம். மைராடா வேளாண்அறிவியல் மையத்தில் இனி  தொடர்ந்து 3 ஆண்டுகளுக்குச் சீரிய முறையில் வீட்டுத் தோட்டம், காளான் வளர்ப்பு போன்ற பயிற்சிகளை வழங்க உள்ளதாகவும் கூறினார்.

இவரைத் தொடர்ந்து காளான் வளர்ப்புப் பயிற்சியைத் தொடங்கிய திருமதி சிவா (மனையியல் தொழில்  நுட்ப வல்லுநர் – மைராடா வேளாண் அறிவியல் நிலையம்) கூறுகையில் வெள்ளைச் சோளத்திலிருந்து வந்தது தான் காளான், மனிதன் உயிர் வாழ மூன்று வி­யங்கள் தேவைப்படுகின்றன.

1.    ஆற்றல் வேண்டும் (மனிதன் அன்றாடம் வேலை
செய்வதற்கு)
2.    உடல் உறுப்புகள் வளரச் சாப்பிட வேண்டும்.
3.    உடலில் எதிர்ப்புச் சக்தி வேண்டும்.
ஆற்றல் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு தானிய வகைகள் உட்கொள்ள ¼வ்ணடும் இதில் மாவுச் சத்து உள்ளது, பருப்பு வகையில் புரதச் சத்து உள்ளது, மேலும் எதிர்ப்புச் சக்திக்குக் காய்கறிச் சத்து தேவைப்படுவதாக உள்ளது.

இவை அனைத்தும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே சரிசம ஊட்டச் சத்து என்று நம்மால் கூற முடியும்.  மேற்கூறிய அனைத்துச் சத்துக்களும் காளானில் உள்ளன. மேலும் இதில் கொழுப்புச் சத்து இல்லாததனால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் உண்ணலாம், இவரைத் தொடர்ந்து திரு.சரவணன் (காளான் பண்ணை உரிமையாளர் – 20 வருடம் அனுபவம் உள்ளவர் – 1994 ஆம் ஆண்டு மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில் அறிமுகமாகி, காளான் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது) பயிற்சியை ஆரம்பித்தார்.

காளான் வகைகள்

தொழில் நுட்பம் வளர்ச்சியடையாத வரையில் நாம் மழைக் காலங்களில் மட்டுமே காளான் உண்டு வந்தோம்.  தற்போது உற்பத்திக்கான சீதோஷ்ண நிலையை ஏற்படுத்தி உற்பத்தியைப் பெருக்கலாம். மொத்தம் சுமார் 20,000 காளான் வகைகள் உள்ளன, இந்தியாவில் மட்டும் 2,000 வகைக் காளான்கள் இருப்பதாகவும் இதில் சிப்பிக் காளான், மொட்டுக் காளான் (ஏப்ரல் 2014 இதழில் விரிவாகக் கட்டுரை வழங்கியது குறிப்பிடத்தக்கது).  நாட்டுக் காளான், அரிசிக் காளான் மற்றும் பால் காளான் போன்றவை பயன்பாட்டில் இருப்பதாகக் கூறினார்.  இயற்கையில் கிடைக்கும் காளான் வகையில் நல்லவை என்று நன்கு தெரிந்தபின்பே உண்ண வேண்டும் என்ற எச்சரிக்கையும் கொடுத்தார்.

காளான் பயன்படுத்தும் இடங்கள்

காளான் ஒரு சிறந்த உணவுப் பொருள் மேலும் அதன் விலையும் குறைவு, ஆகவே நுகர்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன் திருமணம், நிச்சயதார்த்தம் போன்ற விசே­ங்களிலும் காளான் உணவு இடம் பிடித்துள்ளது. மேலும் இதிலிருந்து கேன்சருக்கான மருந்தும் தயாரிக்கப் படுவதாகக் கூடுதல் தகவல்களும் அளித்தார்.

காளான் உற்பத்திக்கான மூலப் பொருள்

காளான் வளர்த்து விற்பனை செய்வது லாபநோக்கத்திற்காகவே. ஆகவே நாம் தேர்வு செய்யும் மூலப் பொருட்கள் எளிதாகவும், குறைந்த விலையுடையதாகவும் தேர்வு செய்தல் அவசியம்.  மக்காச்சோளத் தட்டு, ராகி மற்றும் கம்பு வகைகளின் தட்டுகள், கரும்புச் சக்கை, வைக்கோல் போன்றவைகள் அடங்கும்.  ராகி, கம்பு, மக்காச்சோளம் போன்றவைகள் வருடம் முழுவதும் கிடைப்பதில்லை, கரும்புச் சக்கையில் வேறு விதமான பூஞ்சைகளும் உருவாகின்றன.  ஆகவே, வைக்கோல் நமக்குச் சிறந்த தேர்வாக அமைகிறது, இது வருடம் முழுவதும் தமிழ்நாட்டில் பயிர் செய்யப்படுகிறது. செயல் முறை என்பது சிப்பி மற்றும் பால் காளான் இரண்டிற்கும் ஒரே முறை பின்பற்ற வேண்டும்.

காளான் வளர்ப்பு (செயல் முறை)இயற்கை முறை
1.    சுத்தமான வைக்கோல் 1-2 இஞ்ச் நீளத்தில் வெட்டி
6-8 மணிநேரம் தண்ணீரில் நன்கு அழுத்தி ஊற
வைக்க வேண்டும்.
2.    பின் வைக்கோலை எடுத்து மூடியிட்ட பாத்திரத்தில்
ஆவியிலோ (அல்லது) சுடு தண்ணீரில் 85ஏ உ2
மணிநேரம் அழுத்தி வைக்கவும்.
3. அதிகப்படியான தண்ணீரை வடித்துவிட்டு,
சுத்தமான தரையில் கையில் இறுக்கிப் பிழிந்தால்
தண்ணீர் சொட்டாத (65%moisture) அளவிற்கு
உலர்த்த வேண்டும்.
4. வீரியமான நன்கு வளர்ந்த காளான் வித்து
பாக்கெட்டை 10 சம பாகங்களாக பிரித்து 12* 24
P.P. (1 அடிக்கு 2 அடி) கவரில் 5 அடுக்கு வருமாறு
இரண்டு படுக்கை 2¾  – 3 வஆ இருக்குமாறு தயார்
செய்ய வேண்டும்.
5.    சுத்தமான S.S. (STAINLESS STEEL) கத்தியில்
பக்கத்திற்கு நான்கு துளைகள் இட வேண்டும்.
6.    20 நாட்கள் இருட்டு அறையில் வைத்து விட
வேண்டும்.  படுக்கை வெள்ளையாக மாறிய பின்
தினமும் 3 வேளை தண்ணீர் தெளிக்க வேண்டும்.
7.    மொட்டு வைத்த 3 வது நாள் அறுவடை செய்து
துளையிட்ட பாலித்தீன் கவரில் எடை போட்டுச் சீல்
வைத்து விற்பனைக்கு அனுப்ப வேண்டும்.

ரசாயன முறை
1.     100 லிட்டர்  தண்ணீர்
2.     125 துயி பார்மாலின்
3.    10 கிலோ வைக்கோல்
4.    8 கிராம் பவிஸ்டின் (BASF W/P 50%)
5.    16 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
6.    செய்முறை 4-7 (இயற்கை முறை) வரை
பின்பற்றவும்.

கவனிக்கப்பட வேண்டியவை
நல்ல தண்ணீர், வீரியமான காளான் வித்து. சுற்றப்புறச் சுகாதாரம் மற்றும் பராமரிப்பு.

காளான் குடில்
மர நிழலில் 11 * 26, 11 * 30 என்கிற அளவில் (SIZE) கிழக்கு மேற்காகவும், வாசல் வடக்கு அல்லது தெற்காகவும் குடில் அமைக்க வேண்டும்.

“சிப்பிக் காளான்’ வளர்ப்போருக்கான தகவல்
குடிசை அமைக்கும் பொழுது 10 அடிக்கு X 30 அடி என்கிற அளவில் அமைக்கும் போது ரூபாய் 15,000/- வரை செலவு ஆகும் (சிறப்பாக இருக்கும்).  அதுவே 10 அடிக்கு X 16 அடி என்கிற அளவில் அமைக்கும் பொழுது ரூபாய் 10,000/- வரை செலவாகும். குடிசை மரநிழலில் அமைப்பது  கூடுதல் சிறப்பாக இருக்கும்.
போர்வெல் தண்ணீர் பயன்படுத்தும் போது PH அளவு காண வேண்டும் PH7 க்கு குறைவாக இருந்தால் நன்மை.  அதுவே PH அளவு 8 முதல் 9 ஆக இருந்தால் பிளீச்சிங் (Bleaching) பவுடர் பயன்படுத்த வேண்டும்.
இந்த வகைக் காளான்களை (பெட் மூலம்) குடில்களுக்குள் கட்டித் தொங்க விடுவது ஒரு சிறந்த வழிவகை ஆகும்.

ஈரப்பதம் ஏற்படுத்துவதற்குக் குடிலுக்குள் 1  HP மோட்டார் மற்றும் ஸ்பிரிங்குலர் (SPRINGLER) பயன்படுத்தலாம்.  தண்ணீர் பயன்படுததுவது குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையை உருவாக்குவதற்கே.
மின் இணைப்பு TARIFF-III A மற்றும் III B போன்ற திட்டங்களில் வாங்க வேண்டும்.  மின் விளக்கு மற்றும் வைக்கோல் வெட்டும் இயந்திரம் வாங்கிப் பயன்படுத்தினால் வேலை பழு குறைவாக இருக்கும் .
1.    சிப்பிக் காளானின் அறுவடை சுமார் 50 – 60
நாட்கள் வரை இருக்கும்.
2.    முதல் அறுவடை காலம் 25 ஆம் நாள் 50 %
அறுவடை
3.    இரண்டாம்  அறுவடை காலம் 37 ஆம் நாள் 25 %
அறுவடை
4.    மூன்றாம் அறுவடை காலம் 39 ஆம் நாள் 12 %
அறுவடை
5.    நான்காம்  அறுவடை காலம் 46 ஆம் நாள் 6 %
அறுவடை
6.    சுழற்சி முறையில் அனைத்துப் பெட்டிலும்
அறுவடை முடிவதற்கு சுமார் 60 நாட்கள் வரை
ஆகும்.
7.    காளான் அறுவடை முடிந்த பின்பு தண்ணீர்
தெளிக்க வேண்டும்.
8.    மழைக் காலங்களில் அறுவடை முன் கூட்டியே
முடிந்து விடும்.
விற்பனை யுக்திகள்:
காளான் அறுவடை முடிந்தவுடன் விற்பனை செய்துவிட வேண்டும். வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகப்படுத்திய பின்பே உற்பத்தியை அதிகரிப்பது உத்தமம் (அறுவடை முடிந்து 12 மணி நேரத்திற்குள் விற்று விட வேண்டும்) பள்ளி, கல்லூரி , ஹாஸ்டல் ஆர்டர்கள் எடுக்கலாம்.பேக்கிங் அழகாக செய்தல் வேண்டும். மேலும் காற்றோட்டம் இருக்கும் வண்ணம் அமைத்தல் அவசியம்  (பாலித்தின் பேக்கில் துளைகள் இடவேண்டும்)

‘பால் காளான்’ வளர்ப்போருக்கான தகவல்கள்

பால் காளான் உற்பத்தி செய்வதற்கு நிலத்தில் குழி எடுக்க வேண்டும்.  அகலம் 10 அடி, ஆழம் 2 அடி, நீளம் 3 அடி. (சுமார் 1 அடி ஆழத்திற்கு குழி எடுத்த மண்ணை மேல் மட்டத்தில் பயன்படுத்தி 1 அடி உயரத்தை ஏற்றிக் கொள்ளலாம்)
மணல் (குப்பை மண்/வயல் மண்), கொஞ்சம் கிளிஞ்சல் பவுடர் (Calcium carbonate) மற்றும் வேக வைக்காத சுண்ணாம்பு இவை அனைத்தையம் தண்ணீர் கலந்து வேக வைக்க வேண்டும் ( 1 மணி நேரம் வரை – உருண்டைப் பதம் வரும் வரை மட்டும்) வேக வைக்கும் பக்குவத்தினை குக்கரில் மேற் கொள்ள வேண்டும்,  சூடு ஆறிய பின்பே அடுத்த தொழில நுட்ப முறைக்குச் செல்ல வேண்டும்.சிப்பிக் காளானைப் போல் பால காளான் பெட் ஓரங்களில் வளர்வதில்லை ஆகவே 1 பெட்டை 2 கூறுகளாகப் பிரித்து (அறுத்து) குழிக்குள் வைத்து வளர்க்க வேண்டும்.குழிக்குள் காளான் உற்பத்தி நடைபெறுவதால் நேரடி வெயில் படுவதை தவிர்க்க, பொய்ப் பந்தல் ஒன்று அமைக்க வேண்டும்.  இதனை சீட் (Silpaulin Carbonate) பயன்படுத்தி குழிக்கு நிழல் அமைக்க வேண்டும். தண்ணீர் தெளிப்பதற்கு ஸ்பிரிங்குலர் பயன்படுத்தலாம்.பால் காளான் சுமார் 1 வாரம் வரை கெடாமல் இருக்கும்..  மேலும் இதில் சிறிதளவு மாட்டுக்கறி வாடை வருவதால் தமிழ்நாட்டில் விற்பனை வாய்ப்பு, குறைவாகவே உள்ளது.கேரள மாழலத்தில் தேவையும், விற்பனை வாய்ப்பும் அதிகமாக உள்ளன.  தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் பால் காளான் வகைகள் கேரளச் சந்தையில் அதிகம் விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.

செட் (உற்பத்திக் கூடம்) சுத்தம் செய்யும் முறை
தேவைப்படும் பொருட்கள்

தண்ணீர் 1 லிட்டர், காதி சோப் (ஒட்டும் திரவமாக) வேப்பெண்ணெய் 1 லிட்டர் கலக்க வேண்டும்.மேற்கூறிய அனைத்தும் ஒன்றாகக் கலந்து ஸ்பிரே செய்ய வேண்டும் (ஒவ்வொரு முறை காளான் அறுவடை முடிந்த பின்பு மட்டுமே சுத்தம் செய்தல் வேண்டும்).

கூடுதல் தகவல்:

காளான் உற்பத்திக்கு பெட் அமைக்கும் பொழுது வைக்கோலைச் சிறிது சிறிதாக வெட்டினால் மிகவும் எளிமையாக பெட் அமைத்துவிடலாம். அதே போல் பூஞ்சாணம் வேகமாக வளரவும் இது உதவும்.காளான் அறுவடை முடிந்த பின்பு கழிவுகளை மண்புழு உரம் தயாரிக்கப் பயன்படுத்தலாம்.  காளான் உற்பத்தியின் போது பெட் அமைத்து 20 நாட்கள் முடிந்த பின்னரே பெட்டின் மீது தண்ணீர் தெளிக்க வேண்டும்.
தமிழகத்தின் சீதோ­ண நிலை, வெப்ப, தட்ப நிலை போன்றவைகளை அறிந்துக் கொள்ள பட்டுப்புழு வளர்ப்பு (Sericulture Department) துறையை அணுகலாம்.

1.    ஆடி மாதம் இறுதி முதல மாசி 15 ம் தேதி வரை சிப்பி
காளான் வளர்வதற்கு சிறந்த பருவம்.
2.    மாசி மாதம் முதல் பால் காளான் சிறப்பாக வளரும்.
3.    சிப்பிக் காளான் வளர்வதற்கான சீதோஷ்ண நிலை
20-30
4.    பால்  காளான் வளர்வதற்கான சீதோஷ்ண நிலை
30-40
5.     பட்டன்  காளான் வளர்வதற்கான சீதோஷ்ண நிலை
15-20

ஒரு பெட்டின் எடை சுமார் 2.75 கிலோவுக்கு குறையாமலும் 3 கிலோவுக்கு மிகாமலும் இருத்தல் அவசியம்.ஒரு பெட்டில் காளான் அறுவடை சுமார்  1டி கிலோ வரை இருக்கும் (விதைத் தன்மை / வீரியம் மற்றும் வைக்கோலின் தரம் போன்றவைகள் இதில் அடங்கும்). இடைத்தரகர்கள் யாருமின்றி உற்பத்தியாளரே சில்லரை வணிகத்தில் ஈடுபடுவது இலாபம் அளிக்கும்.

எச்சரிக்கை

ஆஸ்துமா, மூச்சு (சுவாச) பிரச்சனை உள்ளவர்கள் காளான் உற்பத்தித் தொழிலை தொடங்க வேண்டாம். அங்கக வேளாண்மை (Organic farming) செய்யும் பண்ணைகளில் காளான் உற்பத்தி செய்ய முடியாது காரணம் டிரைக்கோடெர்மாவிரிடி, சூடோமோனாஸ் போன்றவைகள் விவசாயத்தில் பயன்படுத்தப்படும் – இவை அனைத்தும் பூஞ்சைக் கொல்லிகள் – காளான் என்பது ஒரு வகை பூஞ்சை ஆகும்.
தூங்கும் இடத்திலோ அல்லது வீட்டிற்குள்ளோ காளான் உற்பத்தி  செய்யக் கூடாது மனிதர்களைப் போல் மூச்சுக் காற்றை சுவாசித்து கரி அமில வாயுவை வெளியேற்றும்.
காளான் வளர்ப்பை வீட்டின் மொட்டை மாடியில் முயற்சி செய்ய வேண்டாம், முதல் மூன்று மாதம் மட்டுமே நன்கு வளரும் பின்பு வளராது காரணம் காற்று அடிக்கும் பொழுது ஈரப்பதம் போய்விடும்.துருப்பிடித்த கத்தியில் (பெட் அமைக்கும் போது) ஓட்டை போடக் கூடாது.

காளான் விதைகள் கிடைக்குமிடம்

1.    1 விதை பேக் – 250 கிராம் – ஒரு பெட் அமைக்கத்
தேவைப்படும்.
2.     1 விதை பேக் – ரூபாய் 30/-
3.    மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில்
கிடைக்கும் (10 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்திட
வேண்டும்)
4.     விதை உற்பத்தி சம்பந்தமான புத்தகம் பெற,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகத்தினைத்
தொடர்பு கொள்ளலாம் – 0422-6611336
(கட்டணமில்லாத் தொலைத் தொடர்பு எண்)

மேலும்  விபரங்களுக்கு
மைராடா வேளாண் அறிவியல் நிலையம்,
04285-241626
K.S.சரவணன் (காளான் பண்ணை உற்பத்தியாளர்),
98425 70746,
திருமதி. சிவா
98427 48963.

No comments:

Post a Comment