Friday, 29 May 2015
சிப்பி மற்றும் பால் காளான் வளர்ப்பு…….
1. ஆற்றல் வேண்டும் (மனிதன் அன்றாடம் வேலை
காளான் வளர்ப்பு (செயல் முறை)இயற்கை முறை
ரசாயன முறை
கவனிக்கப்பட வேண்டியவை
காளான் குடில்
“சிப்பிக் காளான்’ வளர்ப்போருக்கான தகவல்
ஈரப்பதம் ஏற்படுத்துவதற்குக் குடிலுக்குள் 1 HP மோட்டார் மற்றும் ஸ்பிரிங்குலர் (SPRINGLER) பயன்படுத்தலாம். தண்ணீர் பயன்படுததுவது குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையை உருவாக்குவதற்கே.
பால் காளான் உற்பத்தி செய்வதற்கு நிலத்தில் குழி எடுக்க வேண்டும். அகலம் 10 அடி, ஆழம் 2 அடி, நீளம் 3 அடி. (சுமார் 1 அடி ஆழத்திற்கு குழி எடுத்த மண்ணை மேல் மட்டத்தில் பயன்படுத்தி 1 அடி உயரத்தை ஏற்றிக் கொள்ளலாம்)
செட் (உற்பத்திக் கூடம்) சுத்தம் செய்யும் முறை
காளான் உற்பத்திக்கு பெட் அமைக்கும் பொழுது வைக்கோலைச் சிறிது சிறிதாக வெட்டினால் மிகவும் எளிமையாக பெட் அமைத்துவிடலாம். அதே போல் பூஞ்சாணம் வேகமாக வளரவும் இது உதவும்.காளான் அறுவடை முடிந்த பின்பு கழிவுகளை மண்புழு உரம் தயாரிக்கப் பயன்படுத்தலாம். காளான் உற்பத்தியின் போது பெட் அமைத்து 20 நாட்கள் முடிந்த பின்னரே பெட்டின் மீது தண்ணீர் தெளிக்க வேண்டும்.
1. ஆடி மாதம் இறுதி முதல மாசி 15 ம் தேதி வரை சிப்பி
ஆஸ்துமா, மூச்சு (சுவாச) பிரச்சனை உள்ளவர்கள் காளான் உற்பத்தித் தொழிலை தொடங்க வேண்டாம். அங்கக வேளாண்மை (Organic farming) செய்யும் பண்ணைகளில் காளான் உற்பத்தி செய்ய முடியாது காரணம் டிரைக்கோடெர்மாவிரிடி, சூடோமோனாஸ் போன்றவைகள் விவசாயத்தில் பயன்படுத்தப்படும் – இவை அனைத்தும் பூஞ்சைக் கொல்லிகள் – காளான் என்பது ஒரு வகை பூஞ்சை ஆகும்.
1. 1 விதை பேக் – 250 கிராம் – ஒரு பெட் அமைக்கத்
மேலும் விபரங்களுக்கு
Wednesday, 27 May 2015
காளான் வளர்ப்பு
காளான் வளர்ப்பு
தேவையானவை:
10 கிலோ வைக்கோல், 12க்கு 24 இன்ச் அளவுள்ள ஹெச்.எம் பாலிதீன் கவர்கள்,
திசு வளர்ப்பு முறையில் பெறப்பட்ட காளான் விதை – 175 கிராம், கார்பன்டைசின்
பவுடர் – 10 கிராம், ஃபார்மலின் – 125 மி.லி., நைலான் ரப்பர் பேண்ட்கள்,
நைலான் கயிறு.
காளான்
விதைகள், காளான் பண்ணைகள்ல கிடைக்கும். சென்னை, கோவை மாதிரியான நகரங்கள்ல
காளான் பண்ணைகள் இருக்கு. கெமிக்கல் பொருட்களையும் அங்கயே வாங்கிக்கலாம்.
ரப்பர் பேண்ட், நைலான் கயிறு, பாலிதீன் பைகளை மொத்த விலை கடைகள்ல
வாங்கலாம்.
சாகுபடி
செய்யும் முறை: முதல்ல 100 லிட்டர் தண்ணியில கார்பன்டைசின் பவுடர் 10
கிராம், ஃபார்மலின் 125 மி.லி-ங்கிற அளவுல ஊத்திக்கணும். இதுல வைக்கோலை
நனைச்சு, பத்துலருந்து 12 மணி நேரம் ஊற வைக்கணும். இப்படி ஊற வைக்கறதால
வைக்கோல்ல இருக்கற பூஞ்சைகள், நுண்கிருமிகள் அழிஞ்சிடும். இந்த வைக்கோலை
காட்டன் துணி.. இல்லேன்னா, சாக்குல பரப்பி, ஈரம் இல்லாத அளவுல நிழல்ல
உலர்த்தணும்.
பாலிதீன்
பையோட அடி முனையை நைலான் ரப்பர் பேண்டால இறுக்கமா முடிச்சுப் போட்டா,
சிலிண்டர் வடிவம் கிடைக்கும். அதுல ரெண்டு கையளவு வைக்கோலைத் திணிச்சு,
ஒவ்வொரு அடுக்கோட ஓரத்துலயும் நடுவுலயும் கைப்பிடி அளவு காளான் விதையைத்
தூவணும்.
இதே
மாதிரி அஞ்சு அடுக்கா வைக்கோலை வெச்சு, விதைகளைத் தூவணும். கடைசியா காளான்
விதை களை தூவி, பையோட மேல் நுனியை நைலான் ரப்பரால காத்துப் புகாத மாதிரி
இறுக்கமாக் கட்டணும். இந்தப் பைகளை ‘பெட்’னு சொல்லுவோம்.
இப்ப,
இந்த கவரைச் சுத்திலும் பால்பாயின்ட் பேனாவோட முனையால எட்டுலருந்து
பத்துத் துளைகள் வரை போட்டுக்கணும். இந்தத் துளைகள் வழியாத்தான் காளான்
மொட்டுக்கள் வெளியே வரும்.

”காளான்
குறைஞ்ச வெப்ப நிலையிலதான் வள ரும். அதனால, இந்தப் பைகள் இருக்குற ரூமைச்
சுத்தி கோணிப்பைகளை கட்டி வைக்கணும். கோணிப்பைகள் மேல, தினமும் காலையில
தண்ணி தெளிக்கணும். இத னால, ரூமோட வெப்பநிலை 10லருந்து 15 டிகிரி
செல்ஷியஸ்க்குள்ள இருக்கற மாதிரி பார்த்துக்கலாம்..” என்கிறவரின் அறையில்
ஒரு தெர்மாமீட்டர் தொங்குவதைக் காண முடிந்தது.
”ரொம்ப
முக்கியமான விஷயம் என்னன்னா, பைகளை தொங்க விடுற தேதியைக் குறிச்சு
வைக்கிறது! தினமும் சரியான வெப்பநிலை இருக்குற மாதிரி பார்த்துக்கிட்டா
போதும்.. பதினஞ்சாவது நாள் துளைகள் வழியா காளான் மொட்டுக்கள்
வெளிப்பட்டுடும். அதுக்குப் பிறகு அப்பப்ப, ஸ்ப்ரே பாட்டில்ல தண்ணியை
விட்டு, மொட்டுக்கள் மேல தெளிக்கணும்.
23-வது
நாள்ல காளான் நல்லா முத்திடும். அப்ப ஒரு பையிலருந்து 400 கிராம் முதல்
600 கிராம் காளானை அறுவடை செய்யலாம். இப்ப, வேற இடங்கள்ல துளை போடணும்.
26-வது நாள்ல திரும்பவும் 300 கிராம் முதல் 450 கிராம் காளானை அறுவடை
செய்யலாம். இதே மாதிரி மொத்தம் அஞ்சு முறை துளைகள் போட்டு காளானை அறுவடை
செய்ய முடியும்.
அறுவடை
செய்யப்பட்ட காளான்களை ஒரு நாள் மட்டும்தான் வெளியில வைக்கலாம்.
ஃப்ரிட்ஜ்லன்னா ரெண்டு நாள் வரை வைக்கலாம். இல்லேன்னா, கெட்டுப் போய்டும்”
என்று தெளிவாக விளக்கியவர், மார்க்கெட்டிங் பற்றியும் சொன்னார்.
”ஓட்டல்கள்ல
ஒரு கிலோ காளான் 75 ருபாய்னு வாங்கிக்கறாங்க. அக்கம்பக்கத்துல
இருக்கிறவங்களுக்கு 200 கிராம் பாக்கெட்டை 15 ரூபாய்க்கும், மத்தவங்களுக்கு
20 ரூபாய்க்கும் கொடுக்கிறேன். இந்தக் காளான் வளர்ப்புல செலவு குறைவு,
வரவு அதிகம்” என்றவர், அதுபற்றியும் சொன்னார்..
”மாடியில
கூரை போடுறதுக்கு எட்டாயிரம் ரூபாய் செலவாச்சு. ஒரு கோணி 15 ரூபா. இது
ரெண்டும் ஒரு தடவை மட்டும் பண்ற முதலீடு. மத்தபடி ஒரு கிலோ பாலிதீன் கவர் –
95 ரூபா, 175 கிராம் காளான் விதைப் – 15 ரூபா (இந்த 175 கிராம் விதையை ஒரு
பெட்டுக்குப் போட முடியும்), கார்பன்டைசின் பவுடர் 1/2 கிலோ – 310 ரூபா,
ஃபார்மலின் 1 லிட்டர் – 25 ரூபா.. இது மட்டும்தான் செலவு. அஞ்சு பெட்டுக்கு
நீங்களே கணக்குப் பார்த்துக்குங்க.. குறைஞ்சது ரெண்டு மடங்கு வருமானம்
கிடைக்கும்!” என்றார் சந்தோஷமாக.
என்னங்க.. காளான் வளர்த்து காசு அள்ள கௌம்பிட்டீங்களா?
Tuesday, 26 May 2015
மணத்தக்காளி சாகுபடி
லராலும் விரும்பிச் சாப்பிடப்படும் கீரை வகைகளில்
இம்மூலிகையும் ஒன்று. வெப்ப மண்டல நாடுகளில் மிகுதியாகக் காணப்படுகிறது.
தமிழகத்தில் மணற்பாங்கான மற்றும் கரிசல் மண் பூமிகளில் உள்ளது. பூக்கள்
வெண்மையாய் இருக்கும். காய்கள் கருமையாகவும், கரும்பச்சையாகவும்
காணப்படும். பழுக்கும்போது சிவப்பு, மஞ்சள், கருப்பு ஆகிய நிறங்களோடு
இருக்கும். இதனுடைய இலை, தண்டு, கனி எல்லாவற்றையும் உணவு மற்றும்
மருந்தாகப் பயன்படுத்தலாம்.
ஈரோடு மற்றும் சேலம் போன்ற மஞ்சள் பயிரிடப்படும் பகுதிகளில் மஞ்சளில் முக்கிய களையாக மணத்தக்காளி விளங்குகிறது. விவசாயிகள் அதனை சரியான முறையில் காயவைத்து மூலிகை கம்பெனிகளுக்கு விற்பனை செய்யலாம்.
இம்மூலிகையானது வாய் புண், குடல் புண் மற்றும் கல்லீரல் வீக்கத்தைக் குணப்படுத்தும் சக்தி கொண்டது.
சாகுபடி:
மதுரை-625 706.
போன்: 08870012396.
நன்றி: தினமலர்
ஈரோடு மற்றும் சேலம் போன்ற மஞ்சள் பயிரிடப்படும் பகுதிகளில் மஞ்சளில் முக்கிய களையாக மணத்தக்காளி விளங்குகிறது. விவசாயிகள் அதனை சரியான முறையில் காயவைத்து மூலிகை கம்பெனிகளுக்கு விற்பனை செய்யலாம்.
இம்மூலிகையானது வாய் புண், குடல் புண் மற்றும் கல்லீரல் வீக்கத்தைக் குணப்படுத்தும் சக்தி கொண்டது.
சாகுபடி:
- விதைகள் மூலமே இது உற்பத்தி செய்யப் படுகிறது.
- எல்லா வகை மண்ணிலும் வளரும். பழங்கள் காயவைக்கப்பட்டு விதைகள் சேகரித்து சாம்பலுடன் கலந்து படுக்கைகள் அமைத்து விதை தூவப்பட வேண்டும்.
- ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ விதை தேவைப்படுகிறது.
- தொழு உரம் இடுவது மிகவும் அவசியமாகும்.
- 6 செ.மீ. உயரம் வளர்ந்தவுடன் கன்றுகளை பிரித்து வயலில் நடலாம்.
- தண்ணீர் பாய்ச்சுவது அவசியம். கன்றுகள் 30 செ.மீ. து 45 செ.மீ. இடைவெளியில் நடவேண்டும். நட்ட செடிகள் மூன்று மாத இடைவெளியில் 120 செ.மீ. வரை வளரும்.
- இதனுடைய மொத்த சாகுபடி காலம் 120 நாட்கள் மட்டுமே.
- செடிகள் வேருடன் பறிக்கப்பட்டு, வேர் பாகம் தவிர்த்து மேல் பகுதிகளான இலை, தண்டு முதலியன துண்டு துண்டாக வெட்டி காய வைக்க வேண்டும்.
- காய வைப்பதற்கு முன் பழங்களை பறித்து விடுவதன் மூலம் விரைவாக காயவும் மற்றும் பூசானம் ஏற்படாமல் தவிர்க்க முடியும்.
- மூன்று நாட்கள் வரை நன்கு காய்ந்தபின் சாக்கு பைகளில் நிரப்ப வேண்டும்.
- காய்ந்த செடியில் ஈரப்பதம் 8%க்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
- சிமென்ட் களம் மற்றும் தார்பாலின் கொண்டு காயவைப்பதன் மூலம் மற்ற தாவரங்கள், மண், கல் ஆகியவை கலந்துவிடாமல் தவிர்க்க முடியும்.
- ஒரு ஏக்கருக்கு 1000-1500 கிலோ வரை காய்ந்த மகசூலை எதிர்பார்க்கலாம்.
- தற்போது ஒரு டன் ரூபாய் 30,000 வரை கொள்முதல் செய்யப்படுகிறது.
- இன்று மருந்து கம்பெனிகளுக்கு இதனுடைய தேவை அதிகமாக உள்ளது.
- பெங்களூருவில் உள்ள நேச்சுரல் ரெமடிஸ் போன்ற நிறுவனங்கள் அதிக அளவில் கொள்முதல் செய்வதுடன் ஒப்பந்த சாகுபடியையும் ஊக்குவிக்கின்றன.
- கம்பெனிகளுக்கு அனுப்பும்போது பயிரிட்டதற்கான சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும். சான்றிதழை வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் கிராம நிர்வாக அதிகாரியிடம் இருந்தும் பெறலாம்.
மதுரை-625 706.
போன்: 08870012396.
நன்றி: தினமலர்
Visit: http://gttaagri.relier.in/
கொத்தமல்லி சாகுபடி
இரகங்கள் : கொத்தமல்லி கோ 1, கோ 2 மற்றும் கோ 3, கோ (சி.ஆர்) 4
மண் மற்றும் தட்பவெப்பநிலை : நல்ல
வடிகால் வசதி உள்ள இரு மண்பாட்டு நிலம் பயிரிட மிகவும் ஏற்றது. மண்ணின்
அமில காரத் தன்மை 6-8 வரை இருக்கவேண்டும். மானாவாரியாகப் பயிரிட ஈரமான
கரிசல் மண் ஏற்றது, வெப்பநிலை சராசரியாக 20-25 செல்சியஸ் இருந்தால் பயிரின்
வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
பருவம் : கீரைக்காக பாத்திகளில் வருடம் முழுவதும் பயிர் செய்யலாம்.
நிலம் தயாரித்தல்
நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை உழுது பண்படுத்திய பிறகு இறவைப் பயிராக இரந்தால் பாத்திகள் அமைத்துக் கொள்ளவேண்டும்.
விதையும் விதைப்பும்
ஜுன் – ஜுலை மற்றும் அக்டோபர் மற்றும் – நவம்பர் மாதங்கள் பயிரிட ஏற்றது.
விதையளவு : 10-12 கிலோ / எக்டர்
(இறவைக்கு) 20-25 கிலோ / எக்டர் (மானாவாரிக்கு) கொத்தமல்லி விதைகளை இரண்டாக
உடைத்து விதைக்கவேண்டும். உடைக்காமல் முழு விதைகளை நடவு செய்தால் விதை
முளைக்காது.
விதை நேர்த்தி : மானாவாரிப் பயிராக
இருந்தால் விதைகளை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் வீதம் பொட்டாசியம் –
டை – ஹைட்ரஜன் பாஸ்பேட் கலந்த கரைசலில் 16 மணி நேரம் விதைநேர்த்தி செய்து
விதைக்கவேண்டும்.
ஒரு எக்டருக்குத் தேவையான விதைகளை 3 பொட்டலம் அசோஸ்பைரில்லம் கொண்டு விதைநேர்த்தி செய்து விதைக்கவேண்டும்.
ஒரு எக்டருக்குத் தேவையான விதைகளை 3 பொட்டலம் அசோஸ்பைரில்லம் கொண்டு விதைநேர்த்தி செய்து விதைக்கவேண்டும்.
ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் ட்ரைக்கோடெர்மா விரிடி கொண்டு நேர்த்தி செய்து விதைத்தால் வாடல் நோயைக் கட்டுப்படுத்தலாம்.
விதை விதைப்பான் மூலம் 20 x 15 செ.மீ இடைவெளியில்
விதைக்கவேண்டும். விதைகள் 8-15 நாட்களுக்குள் முளைத்துவிடும். மானாவாரி
சாகுபடியில் விதைகளைத் தூவும் முறையில் விதைத்து விட்டு நாட்டுக் கலப்பைக்
கொண்டு மூடிவிடவேண்டும்.
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை
அடியுரம் : எக்டருக்கு 10 கிலோ தொழு உரம்
கடைசி உழவின் போது இடவேண்டும். விதைப்பதற்கு முன் இறவை மற்றம் மானாவாரிப்
பயிர்களுக்கு 10 கிலோ தழைச்சத்து, 40 கிலோ மணிச்சத்து, 20 கிலோ
சாம்பல்சத்து கொடுக்கக்கூடிய இராசயன உரங்களை இடவேண்டும்.
மேலுரம் : இறவைப் பயிருக்கு மட்டும் விதைத்த 30வது நாள் எக்டருக்கு 10 கிலோ தழைச்சத்து கொடுக்கக்கூடிய உரத்தை அளிக்கவேண்டும்
நீர் நிர்வாகம்
விதைத்தவுடன் மற்றும் மூன்றாம் நாள் அதன் பின்னர் 7 முதல் 10 நாட்களுக்குள் ஒரு முறை நீர்ப் பாய்ச்சவேண்டும்.
களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி
களைகள் முளைக்கும் முன்னர் புளுக்குளோரலின் எக்டருக்கு 700
மில்லி மருந்தை 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும். விதைத்த 30
நாட்கள் கழித்து பயிர் களைதல் வேண்டும். தேவைப்படும் போது களை
எடுக்கவேண்டும். மானாவாரிப் பயிருக்கு விதைத்த 30 நாட்கள் கழித்து 250
பிபிஎம் சிசிசி என்ற பயிர் ஊக்கி தெளித்தால் பயிர் வறட்சியைத் தாங்கி
வளரும்.
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு
அசுவினிப்பூச்சி : இப்பூச்சியைக் கட்டுப்படுத்த மீதைல் டெமட்டான் 20 இசி மில்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.
நோய்கள்
சாம்பல் நோய் : எக்டருக்கு 1 கிலோ கந்தகப்பொடி தூவவேண்டும்.
வாடல் நோய் : இந்நோய் வேர்களைத்
தாக்குவதன் மூலம் செடி பச்சையாக இருக்கும் போதே வாடிவிடும்.
இதைக்கட்டுப்படுத்த வாடல் நோய் தாக்காத நல்ல விதைகளைப் பயன்படுத்தவேண்டும்.
ட்ரைக்கோடெர்மா விரிடி மற்றும் பூஞ்சாணக் கொல்லியினால் விதை நேர்த்தி
செய்து விதைக்கவேண்டும். கோடைக்காலத்தில் நிலத்தை ஆழமாக உழவேண்டும். மூன்று
ஆண்டுகள் தொடர்ந்து ஒரே வயலில் கொத்தமல்லி சாகுபடி செய்தலைத்
தவிர்க்கவேண்டும்.
அறுவடை
விதைத்த 30வது நாளில் செடிகளைக் கலைத்து விடுவதன் மூலம்
கீரைகளாக அறுவடை செய்யலாம். சாதாரணமாக விதைத்த 90 முதல் 110 நாட்களில்
விதைகளை அறுவடை செய்யலாம். காய்கள் நன்கு பழுத்தவுடன், காயின் நிறம் பச்சை
நிறத்திலிருந்து மஞ்சள் கலந்த பழுப்பு நிறமாக மாறும் போது அறுவடை
செய்யவேண்டும்.
மகசூல் (எக்டருக்கு) : மானாவாரி சாகுபடியில் 300-400 கிலோ விதைகள், இறவையில் 500-600 கிலோ விதைகள் கீரையாக 6-7 டன்கள்.
கீரை சாகுபடி
கீரை சாகுபடி
- கீரை சாகுபடியில் நிலத்தை தயார் செய்வதற்கு நல்ல கவனம் தர வேண்டும்.
- நிலத்தை நன்கு உழுது கட்டிகள் இல்லாமல் செய்து அவைகளில் பாத்திகளை தயார் செய்து கொள்ளலாம்.
- பாத்திகளின் அளவு நமது நிர்வாகத் திறமைக்கு ஏற்றபடி 8 சென்ட் முதல் 10 சென்ட் உள்ளபடி செய்து கொள்ளலாம்.
- கீரை சாகுபடிக்கு அதிகம் தேவைப்படுவது நன்கு மக்கிய தொழு உரமாகும்.
- இந்த எருவினை நன்கு மக்க வைப்பது இரண்டு காரணங்களுக்காக அவசியம் ஆகிறது.
- எரு நன்கு மக்காமல் இருந்தால் அதில் களைச்செடிகளின் விதைகள் மடியாமல் இருந்து இதனை பாத்தியில் போடும்போது அதிக அளவில் களைச்செடிகள் முளைத்து விடும்.
- எரு நன்கு மக்காமல் இருப்பின் அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் செடிகளுக்கு உடனே கிடைக்காது.
- மேலும் எரு நன்கு மக்கியிருக்கும்போது இதை இடும் இடத்தில் மண் இளக்கமாக இருக்கும்.அதோடு எரு இட்ட இடத்தில் வடிகால் வசதி நன்றாக இருக்கும்.
- இயற்கை எருவினை சாகுபடி காலத்திற்கு முன்பாகவே சேகரித்து வைத்துக் கொண்டு அதன் மேல் சூரியஒளி படாமல் பாதுகாக்க வேண்டும்.
- எருவினை சமயம் கிடைக்கும்போது கட்டி இல்லாமல் பொடி செய்து குவித்து வைத்து ஓலைகளைக் கொண்டு மூடி வைத்துக் கொள்ள வேண்டும்.
- இதோடு வளமான செம்மண் மற்றும் மணல் இவைகளையும் சேகரித்து வைத்துக் கொண்டு பாத்தியில் சாகுபடி செய்யும் சமயம் இவைகளை எருவுடன் கலந்து இடலாம்.
- வசதி கிடைக்கும்போது குளத்து வண்டல் மண்ணினை சேகரித்து இதனுடன் எருவினை நன்கு கலந்து சாகுபடி செய்யும் பாத்திகளுக்கு இடலாம்.
- எருவினை பாத்தியில் போட்டால் மட்டும் போதாது.
- அவைகளை சாகுபடி செய்யும் நிலங்களுக்கு இட்ட உடனே பாத்தியை நன்கு கொத்தி விட வேண்டும்.
- அப்போது தான் எரு நன்கு மண்ணோடு கலந்து கீரை செடிகளை தளதளவென்று வளர வைக்கும்.
- கீரை சாகுபடியில் முடிந்தவரையில் இயற்கை உர உதவியுடன் செய்வது நல்லது.
- இருப்பினும் தொடர்ந்து ஒரே இடத்தில் கீரை சாகுபடி செய்து வருவதால் இயற்கை உரங்களோடு தேவையான அளவு ரசாயன உரங்களை இடலாம்.
- கீரை சாகுபடி செய்பவர்கள் நிலத்திற்கு தேவையான இயற்கை எருக்களை தாங்களே தயார் செய்கிறார்கள்.
- குடும்ப நபர்களே தங்கள் நிலத்தில் வேலை செய்வதால் வேலைக்கு கூலி ஆட்களை வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
- சாகுபடி செய்யும் கீரை முளைக்கீரையாக இருக்கலாம். சிறு கீரையாக இருக்கலாம். இவைகளின் வயது 24 நாட்களாக இருக்குமா என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
- விதை விதைத்த 21,22,23,24 நாட்களில் கீரைச்செடிகளை வேரோடு பிடுங்கலாம்.
- ஒரு நாளைக்கு 300 கட்டுகள் கீரை கிடைக்கும். எட்டு சென்ட் நிலத்தில் ஒரு கிலோ விதையை விதைக்கலாம்.
- ஒரு கிலோ விதையின் விலை ரூ.1,000.
- எட்டு சென்ட் பரப்பில் நான்கு அறுவடைகளில் ஒரு நாளைக்கு 300 கட்டுகள் வீதம் 1,200 முளைக்கீரை, அரைக்கீரை கட்டுகள் கிடைக்கும். ஒரு கட்டின் விலை ரூ.10.
- கீரை சாகுபடியில் செய்பவர்களின் குடும்பமே நிலத்தில் பணி செய்கின்றது.
- கீரை சாகுபடி செய்பவர்கள் பாத்திகளை அழகாகப் போட்டு மண்ணை மேடு பள்ளம் இல்லாமல் சமமாக செய்கிறார்கள்.
- குடும்பத்தில் உள்ளவர்கள் நிலத்தில் பாடுபட்டு உழைத்து கீரை சாகுபடி செய்கின்றனர். அவர்களே கீரைகளின் வேர்களில் மண் ஒட்டாமல் தண்ணீரில் அலசி சுத்தம் செய்து கட்டுகளை நேர்த்தி செய்கிறார்கள்.
- குடும்ப நபர்களே ஈடுபடுவதால் சாகுபடி செலவு அதிகம் இல்லை.
- அறுவடையான கீரையை மார்க்கெட்டிற்கு எடுத்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை. விற்பனை பிரச்னை எதுவும் இல்லை.
- சாகுபடி நிலத்திலும், விவசாயி வீட்டிற்கும் நுகர்வோர்கள் வந்து கீரையை விலைக்கு வாங்கி செல்கிறார்கள்.
- ஒரு விவசாயி மூன்று மாதங்கள் முளைக்கீரை, சிறு கீரை சாகுபடி செய்தால் கீரை விதை விலை ரூ.1,000 போக ரூ.20,000 நிச்சயமாக லாபம் எடுக்கலாம்.
- கீரை சாகுபடி செய்பவர்கள் பாடுபட்டு உழைத்து ஊட்டச்சத்துக்கள் மிகுந்த கீரையை நமக்கு அளிக்கிறார்கள்.
நன்றி: தினமலர்
Visit: http://gttaagri.relier.in/
கீரையில் மாதம் ரூ.45 ஆயிரம்
முன்னோர்களிடம் கீரையை உணவில்
அதிகம் சேர்க்கும் பழக்கம் இருந்தது. இதற்காக, வீட்டு தோட்டங்களிலேயே
முருங்கை, அகத்தி, சிறுகீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரைகளை
பயிரிட்டனர். காலப்போக்கில், வீட்டு தோட்டங்கள் மறைந்து, உணவில் கீரை
சேர்க்கும் பழக்கம் குறைந்தது. இதனால் உடலில் பாதிப்பு அதிகரித்தது.
டாக்டர்களின் ஆலோசனைப்படி, இன்றைக்கு “வாக்கிங்’ செல்வோர், வீட்டிற்கு
திரும்பும் போது, “கீரை கட்டுகளை’ வாங்கிச் செல்கின்றனர்.அதற்கேற்றார்
போல், சிவகங்கை அருகே மேலசாலூரை சேர்ந்த விவசாயி பி.போஸ், தனது நிலத்தில்
முற்றிலும் கீரை பயரிட்டு, லாபம் பார்த்து வருகிறார்.அவர் கூறியதாவது:
சிவகங்கை.
நன்றி:தினமலர்
- கடும் வறட்சிக்கு இடையே கிணற்றில் உள்ள தண்ணீரை வைத்து, கீரை பயிரிட்டு வருகிறேன். நான் மட்டுமின்றி, எனது சகோதரர்களும் சேர்ந்து, ஒட்டு மொத்தமாக 1.5 ஏக்கரில் கீரை நடவு செய்துள்ளோம்.
- நான் மட்டுமே 50 சென்ட்டில்,200 பாத்தி அமைத்துள்ளேன்.
- ஒரு பாத்திக்கு 50 கிராம் விதையை தூவ வேண்டும். விதை தூவிய பின், தினமும் தண்ணீர் பாய்ச்சுவதோடு, களையெடுப்பு, உரம், பூச்சி மருந்து தெளித்து,முறையாக கவனித்து வரவேண்டும்.
- ஒரு மாதத்திற்கு பின் கீரை நன்கு வளர்ந்து, அறுவடைக்கு தயாராகும்.
- இங்கு தண்டுகீரை, அரைக்கீரை, சிறு கீரை, பாலைக்கீரை, பருப்பு கீரை, வெந்தயகீரை, புளிச்சகீரை, பொன்னாங்கண்ணி கீரை, மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை போன்று, மருத்துவ குணமுள்ள கீரைகளை அதிகளவில் பயிரிட்டுள்ளேன்.
- நாள் ஒன்றுக்கு, 300 முதல் 500 கட்டு (ஒரு கட்டு 250 கிராம்)அறுவடை
செய்து விற்பேன். ஒரு கட்டு ரூ.5க்கு விற்கிறது. இதன் மூலம், நாள்
ஒன்றுக்கு ரூ.2,500 வருவாய் கிடைக்கும். உரம், பூச்சி மருந்து, விவசாய
கூலியாட்கள் சம்பளம் என்ற விகிதத்தில் ரூ.1,000 செலவு போக, தினமும் கீரை
மூலம் ரூ.1,500 வீதமும், மாதம் ரூ.45 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும். நல்ல
மழை பெய்தால் இன்னும் அதிக நிலங்களில் கீரை பயிரிடலாம், என்றார்.
ஆலோசனைக்கு- 09786948567.
சிவகங்கை.
நன்றி:தினமலர்
அதிக லாபம் தரும் வெந்தய கீரை!
குறுகிய காலத்தில் அதிக லாபம் தரும் வெந்தயக்கீரை சாகுபடி
குறித்து விளக்கும், புதுவையில் செயல்பட்டு வரும், சுற்றுச்சூழல் மற்றும்
வேளாண் அபிவிருத்தி மையத்தின் இயக்குனர் கணேஷ் கூறுகிறார்:
- நிலத்தை நன்றாக உழுது, தொழு உரமிட்டு, மீண்டும் ஒருமுறை உழுது கொள்ள வேண்டும்.
- பின், சீரான இடைவெளியில் மேட்டுப் பாத்தி அமைத்து, அதன்மீது விதைகளை விதைக்க வேண்டும்.
- விதைப்பதற்கு முன் வெந்தய விதைகளை, அசொஸ்பைரில்லம் மற்றும் ட்ரைகோடர்மாவிரிடி கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
- ஏக்கருக்கு, 4 முதல், 5 கிலோ வெந்தய விதைகள் தேவைப்படும். வடிகால் வசதியுடைய கரிசல் அல்லது அங்ககச்சத்து நிறைந்த, மணற்பாங்கான நிலத்தில் வெந்தயம் பயிரிடலாம்.
- அக்., முதல், டிச., மாதங்களில் வெந்தய விதைகளை பயிரிடலாம். மானாவாரியாகவும், வெந்தயத்தை பயிரிடலாம்.
- 25 முதல், 28 டிகிரி வெப்பத்தில், இவை வளரக் கூடியவை.
- விதைத்த, 10 முதல், 15 நாட்களுக்குள் வெந்தயச் செடிகள் முளைத்து விடும். 25 நாட்களில் வெந்தயச் செடியின் தழைகளை, கீரைகளாக அறுவடை செய்யலாம்.
- 90 முதல் 100 நாட்களுக்குள் வெந்தய விதைகளை அறுவடை செய்யலாம்.
- சாம்பல் நோய் தாக்குதல் தென்பட்டால், ஹெக்டருக்கு, 25 கிலோ சல்பர் மற்றும் கந்தகப் பொடியை பயன்படுத்தலாம்.
- மூன்று நாட்களுக்கு ஒருமுறை, நீர் பாய்ச்ச வேண்டும்.
- வெந்தயம் பயிரிடப்பட்டுள்ள நிலப்பகுதியை, ஈரப் பதத்துடன் இருக்கும்படி வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதற்காக, தேங்காய் நாரை செடிகளின் இடையே இடலாம்.
- வெந்தயச் செடிகளின் தழைகளை, கீரைகளாக விற்பனை செய்யலாம். ஏக்கருக்கு, 4 டன் கீரைகளை அறுவடை செய்யலாம்.
- நம் பகுதிகளில் வெந்தய விதைகளை அறுவடை செய்ய வேண்டுமென்றால், நிழல் வலை அமைத்து பயிர் செய்ய வேண்டும்.
- மருத்துவ குணம் கொண்ட வெந்தயத்தை உட்கொண்டால், வயிற்று உபாதைகள் நீங்கும் என்பதோடு, சந்தையில் வெந்தயக் கீரைக்கு எப்போதுமே, ‘டிமாண்ட்’ அதிகம் உள்ளது. ஒரு கட்டு வெந்தயக் கீரையை சராசரியாக, 30 ரூபாய் வரை விற்பனை செய்வதன் மூலம், குறுகிய காலத்தில், அதிக லாபம் ஈட்டலாம்.
கொத்தமல்லி சாகுபடி டிப்ஸ்
- நிலத்தை நன்றாக உழுது, ஏக்கருக்கு, 10 டன் தொழு உரம் இட்டு, மீண்டும் உழுத பின், மேட்டுப் பாத்திகள் அமைத்து, பாத்தியின் மீது விதைகளைப் போட்டு, மண்ணை மூட வேண்டும்.
- ஏக்கருக்கு, 4 முதல், 5 கிலோ கொத்தமல்லி விதைகள் தேவைப்படும்.
- கொத்தமல்லியை, சொட்டு நீர்ப் பாசன முறையிலும் பயிரிடலாம்.
- மானாவாரியாக, கொத்தமல்லியை சாகுபடி செய்தால், ஏக்கருக்கு, 10 கிலோ விதைகள் தேவைப்படும்.
- விதைப்பதற்கு முன், ‘பொட்டாஷியம் – டை – ஹட்ரஜனை’ ஒரு லிட்டர் நீருக்கு, 10 கிராம் வீதம் கலந்து, விதைகளை, 16 மணி நேரம் ஊற வைத்து, விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
- அதன்பின், விதைகளை வெயிலில் உலர்த்தி, அவற்றை இரண்டாக உடைத்து விதைக்க வேண்டும்.அப்போதுதான், விதைகள் முளைக்கும்.
- நல்ல வடிகால் வசதியுள்ள நிலத்திலும், கார அமிலத் தன்மை, ஆறு முதல் எட்டு வரை இருக்கும் மண் வகையிலும், கொத்தமல்லியை சாகுபடி செய்யலாம்.
- 25 முதல், 28 டிகிரி வெப்பத்தில் வளரக்கூடிய இவற்றை, அனைத்துப் பருவத்திலும் சாகுபடி செய்யலாம்.
- விதை விதைத்த, 10முதல் 15 நாட்களுக்குள், கொத்தமல்லிச் செடிகள்முளைத்து விடும்.
- விதைத்த மூன்றாம் நாளும், அதன்பின், வாரம் ஒரு முறையும் செடிகளுக்கு நீர் பாய்ச்ச வேண்டும்.
- விதைத்த 30வது நாள், தழைச்சத்து அடங்கிய மருந்தைத் தெளிக்க வேண்டும்.
- கொத்தமல்லி சாகுபடியில், அசுவனிப்பூச்சி தென்பட்டால், ‘மீதைல் டெமட்டான்’ மருந்தையும், பயிர்களில் வேர் அழுகல் நோய் தென்பட்டால், ‘ட்ரைக்கோடர்மாவிரிடி, சூடோ மோனஸ், அசோஸ்பைரில்லம்’ போன்ற மருத்துகளைப் பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம்.
- நோய் தாக்கிய செடிகளை, வேரோடு பிடுங்கி விடுவது நல்லது.
- சாம்பல் நோயை கட்டுப்படுத்த, வேப்பெண்ணெய் மற்றும் கந்தகப் பொடி அல்லது பஞ்ச காவ்யா கரைசலையும் செடிகளுக்குத் தெளிக்கலாம்.
- மேலும், 15 நாட்களுக்கு ஒரு முறை, களையெடுக்க வேண்டும்.
- மொத்தத்தில், 30 முதல் 45 நாட்கள் வரை வளர்ந்த கொத்தமல்லிச் செடிகளிலிருந்து, ஏக்கருக்கு, 3 முதல், 4 டன் வரை கொத்தமல்லித் தழைகளையும், 90 நாட்கள் வரை வளர்ந்த செடிகளிலிருந்து, 200 முதல் 300 கிலோ வரை, கொத்தமல்லி விதைகளையும் அறுவடை செய்யலாம்.
- சமையலில் கொத்தமல்லி முக்கிய அங்கம் வகிப்பதோடு, கொலஸ்ட்ரால் மற்றும் நீரழிவு நோய்க்கு சிறந்த மூலிகையாக திகழ்வதால், இதற்கு, ‘டிமாண்ட்’ அதிகம். அதனால், மிக எளிதாக சந்தைகளில் கொத்தமல்லியை விற்பனை செய்து விடலாம்.
உவர்ப்பு நீரில் வளரும் கீரைகள்
- தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேல்மங்கலத்தை சேர்ந்த விவசாயி கட்டத் தேவன், 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு கீரை செடிகளை வளர்த்து அதிக லாபம் ஈட்டி வருகிறார். இவர் 60 சென்ட் நிலத்தில் வெந்தயக்கீரை, மிளகு தக்காளி கீரை, அரைக்கீரை, பருப்பு கீரை, சிறுகீரை, சிவப்பு பொன்னாங்கண்ணிக் கீரை, அகத்திக்கீரை என பல வகை கீரைகளை சாகுபடி செய்துள்ளார்.
- நோய் தாக்குதல் இல்லாமல் இருந்தால் ஆறு மாதம் முதல் ஓராண்டு வரை இதன் பயனை அனுபவிக்க முடியும்.
- வியாபாரிகள் தோட்டத்திற்கு வந்து வாங்கிச்செல்கின்றனர். ஒரு கிலோ ரூ.10 வரை விலை கிடைக்கிறது. ஒரு முறை அறுவடை செய்துவிட்டால் மீண்டும் 10 நாட்களுக்கு பிறகு தான் மீண்டும் அறுவடை செய்யமுடியும்.
- கீரைகள் நல்ல முறையில் வளர்ந்து பலன் தரவேண்டும் என்றால் உவர்ப்பு தன்மை உள்ள நீரை பயன்படுத்தவேண்டும்.
- ஆண்டிற்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைக்கிறது. நெல், வாழை, கரும்பு என பணப்பயிர்களை பயிரிட்டு நீர் பற்றாக்குறை மற்றும் நோய் தாக்குதலால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இவர் மகிழ்ச்சியாக விவசாயம் செய்து வருகிறார்.
- விவசாயி கட்டத்தேவன் கூறியதாவது: எனக்கு சொந்தமான விவசாய கிணற்றில் கிடைக்கும் நீர் உவர்ப்பு தன்மை கொண்டதாக உள்ளது. இதனால் காய்கறி மற்றும் இதர பயிர்களை சாகுபடி செய்தால் பலன் கிடைக்காது. இதனால் கீரை சாகுபடியில் ஈடுபட்டேன், என்றார். தொடர்புக்கு 09944523405.
Subscribe to:
Posts (Atom)